எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், இந்தியாவில் பிறந்த இந்துஜா சகோதரர்களை பிரிட்டன் நாட்டின் முதல் கோடீஸ்வர குடும்பமாக அந்நாட்டின் பிரபல பத்திரிகை பட்டியலிட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த சண்டே டைம்ஸ் பத்திரிகை அந்நாட்டின் பிரபல பெரும்செல்வந்தர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் இந்தியாவில் பிறந்து தற்போது லண்டன் நகரில் வசித்தவாறு பல்வேறு தொழில்கள் மற்றும் வர்த்தகங்களை செய்துவரும் ஸ்ரீசந்த் இந்துஜா மற்றும் கோபிசந்த் இந்துஜா சகோதரர்கள் 22 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துகளுடன் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளனர்.
இவர்களின் மேலும் இரு சகோதரர்களான பிரகாஷ் இந்துஜா மற்றும் அசோக் இந்துஜா ஆகியோர் லண்டன் மற்றும் மும்பையில் உள்ள தொழில் நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். பெட்ரோலிய உற்பத்தி, எரிவாயு, தகவல் தொடர்புத்துறை, ஊடகங்கள், வங்கிதுறை, ரியல் எஸ்டேட் மற்றும் மருந்து உற்பத்தி துறைகளில் இந்துஜா குமுமம் முதலீடு செய்து தொழில் நடத்தி வருகிறது.
இந்தியாவில் இவர்களுக்கு சொந்தமாக உள்ள அசோக் லேலண்ட் வாகன உற்பத்தி நிறுவனம் மற்றும் இன்டஸ்இன்ட் வங்கியின் பங்குகள் சமீபகாலமாக நல்ல வளர்ச்சியுடன் கைமாறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


