வாரணாசியில் மோடி பிரசாரம் செய்த இடங்களில் பிரியங்கா ரோடுஷோ

வியாழக்கிழமை, 16 மே 2019      இந்தியா
Priyanka 2019 03 25

வாரணாசி, பாராளுமன்ற தேர்தலில் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பிரியங்கா நடத்திய ரோடு ஷோவில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

பாராளுமன்றத்துக்கு வரும் 19-ம் தேதி நடக்கும் 7-வது கட்ட தேர்தலில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது.

இந்த 59 தொகுதிகளில் வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக களம் இறங்கியுள்ள பிரதமர் மோடி கடந்த மாதம் 25-ம் தேதி அங்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் வாரணாசியில் சுமார் 3 லட்சம் பேர் கலந்துகொண்ட மிகப்பிரமாண்ட ரோடு ஷோவில் கலந்து கொண்டார். அதன்பிறகு மோடி 2 முறை வாரணாசிக்கு சென்று தனக்கு ஆதரவு திரட்டினார். பிரசாரம் நிறைவு பெறும் நாளையும் மோடி வாரணாசியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராயை ஆதரித்து பிரசாரம் செய்தார். ஏற்கனவே 2 முறை வாரணாசியில் பிரசாரம் செய்துள்ள பிரியங்கா 3-வது முறையாக அங்கு சென்று ஆதரவு திரட்டினார். வாரணாசி தொகுதிக்கு சென்று சேர்ந்த அவர் ரோடு ஷோவும் நடத்தினார்.

பிரதமர் மோடி கடந்த மாதம் வேட்பு மனுதாக்கல் செய்யும் முன்பு வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து ரோடு ஷோவை தொடங்கினார். பிரியங்காவும் அதே இடத்தில் இருந்து ரோடு ஷோவை நடத்தினார். மோடி செய்தது போல அவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மதன்மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பிரியங்கா ரோடு ஷோ நடத்தினார். பிரியங்காவைப் பார்ப்பதற்காக அவர் ரோடு ஷோ செல்லும் பகுதிகளில் ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர். குறிப்பாக பிரதமர் மோடி கடந்த 25-ம் தேதி நடத்திய ரோடு ஷோ பாதைகளில் பெரும்பாலான பகுதிகளில் பிரியங்காவின் ரோடு ஷோவும் அமைந்தது.இந்த ரோடு ஷோவால் வாரணாசி தொகுதி காங்கிரஸ் தொண்டர்களிடம் புத்துணர்ச்சி ஏற்பட்டு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி உள்ளனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து