பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது ஒருநாள்: ஜேசன் ராய் வாணவேடிக்கையால் இங்கிலாந்து அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது

சனிக்கிழமை, 18 மே 2019      விளையாட்டு
england win 2019 05 18

நாட்டிங்காம் : ஜேசன் ராய் 89 பந்தில் 114 ரன்கள் விளாச பாகிஸ்தானுக்கு எதிராக 341 ரன்களை சேஸிங் செய்து அசத்தல் வெற்றி பெற்றது இங்கிலாந்து.

340 ரன் குவிப்பு...

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று முன்தினம் பகல்-இரவாக நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 340 ரன் குவித்தது. பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 63-வது போட்டியில் ஆடும் அவருக்கு இது 9-வது செஞ்சூரியாகும். பாபர் ஆசம் 112 பந்தில் 115 ரன்னும் (13 பவுண்டரி, 1 சிக்சர்), முகமது ஹபீஸ் 59 ரன்னும், பகர் ஜமான் 57 ரன்னும் எடுத்தனர். டாம் குர்ரான் 4 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் விளையாடிய இங்கிலாந்து 49.3 ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்து 341 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்று சாதித்தது.

ஜேசன் ராய் அதிரடி...

தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 8-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 89 பந்தில் 114 ரன்னும் (11 பவுண்டரி, 4 சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 64 பந்தில் 71 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். முகமது ஹஸ்னைன், இமாத் வாசிம் தலா 2 விக்கெட்டும் ஜுனைத்கான், ஹசன் அலி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

தொடரை வென்றது...

இங்கிலாந்தின் வெற்றியில் பாபர் ஆசமின் சதம் பலன் இல்லாமல் போனது. இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு இருந்தது. 2-வது மற்றும் 3-வது போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது. கடந்த போட்டியில் இங்கிலாந்து 359 ரன் இலக்கை எடுத்தது. தற்போது 341 ரன் இலக்கை எடுத்து 3 விக்கெட்டில் வென்றுள்ளது. இதனால் உலகக்கோப்பையில் அந்த அணி கடும் சவாலாக விளங்கும். இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் லீடஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து