எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரத்தில் நான் எடுக்கும் முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று பிரியங்கா கூறியுள்ளார்.
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரது விடுதலை விவகாரம் குறித்து பிரியங்காவிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-
தனிப்பட்ட முறையில் எனக்கு வன்முறை மீது நம்பிக்கை கிடையாது. வன்முறை மீது மேலும் வன்முறையை ஏவுவது சரியான பதிலாக இருக்க முடியாது. வன்முறைக்கு அகிம்சைதான் சரியான பதிலாக இருக்க முடியும். இந்த விவகாரத்தை பொறுத்த வரை 2 விதமான விஷயங்கள் உள்ளன. ஒன்று எனது தனிப்பட்ட விஷயம் தொடர்பானது. அதாவது கொல்லப்பட்டவர் எனது தந்தை. அந்த வகையில் எனது கருத்துக்களை ஏற்கனவே பல முறை கூறி விட்டேன். இந்த கொலையில் தண்டனை பெற்றுள்ள நளினியையும் நான் ஜெயிலுக்கு சென்று சந்தித்தேன். நளினியும் என் வேதனை தொடர்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். என்ன தான் வேதனை இருந்தாலும் நான் உறுதியாக இருந்தேன்.
அடுத்ததாக எனது தந்தையின் கொலை அரசியல் தொடர்பானது. அது, முழுமையாக வேறுபட்டது. அரசியல் ரீதியாக பார்க்கும் போது, அவர் ஒரு முன்னாள் பிரதமர். அரசியல் ரீதியாக நடத்தப்பட்ட கொலை. பயங்கரவாதத்தின் செயலால் இந்த கொலை நடந்தது. அதில் மேலும் பலர் கொல்லப்பட்டனர். எனவே, இந்த விஷயத்தில் மனிதாபிமான முறையில் மகளாகிய நான் எடுத்த முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு பிரியங்கா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


