Idhayam Matrimony

உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர்க்கு இடம்

புதன்கிழமை, 22 மே 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டது இங்கிலாந்து. ஜாப்ரா ஆர்சர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

10 அணிகள்...

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த மாதம் 20-ம் தேதிக்குள் முதற்கட்ட அணியை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கூறியிருந்தது. ஆனால் நாளை (மார்ச் 23-ந்தேதி) வரை தேவைப்பட்டால் அணியில் உள்ள வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

15 பேர் பட்டியல்...

நேற்று முன்தினம் பாகிஸ்தான் அணி மூன்று வீரர்களை மாற்றியிருந்தது. இங்கிலாந்து அணியின் முதற்கட்ட பட்டியலில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜாப்ரா ஆர்சர், லியாம் டாசன் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆர்சர் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் நேற்று இங்கிலாந்து 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் ஆர்சர், டாசன் இடம்பிடித்துள்ளனர்.

இங்கிலாந்து அணி விவரம்:-

1. மோர்சன் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. ஜோஸ் பட்லர், 5. டாம் குர்ரான், 6. லியாம் டாசன், 7. லியாம் பிளங்கெட், 8. அடில் ரஷித், 9. ஜோ ரூட், 10. ஜேசன் ராய், 11. பென் ஸ்டோக்ஸ், 12. ஜேம்ஸ் வின்ஸ், 13. கிறிஸ் வோக்ஸ், 14. மார்க்வுட். 15. ஜாப்ரா ஆர்சர்.

முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த அலேக்ஸ் ஹேல்ஸ், ஜோ டென்லி ஆகியோர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து