எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது உறுதியாகி உள்ள நிலையில், காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடரப்போவது இதுவே முதல் முறையாகும்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்துள்ளது. இந்திராகாந்தி ஆட்சியின் போதுதான் முதல் முதலாக ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்து காங்கிரசின் தொடர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பிறகு காங்கிரசுக்கு எதிராக வலிமையான கட்சி உருவாகாமல் இருந்தது.
இந்த நிலையில் வாஜ்பாய் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்தது. மத்தியில் காங்கிரசை வீழ்த்திய வாஜ்பாய் 5 ஆண்டுகள் முழுமையான ஆட்சியை கொடுத்தார். அவர் 2 முறை பிரதமர் பதவியை வகித்தார். ஆனால் குறைந்த ஆண்டுகள்தான் அவரால் மத்தியில் ஆட்சி செய்ய முடிந்தது.
இந்த நிலையில் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு கடந்த 2014-ம்ஆண்டு பிரதமர் மோடி முடிவுரை எழுதினார். 2019 வரை 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த மோடி மீண்டும் தற்போது வெற்றி பெற்று இருக்கிறார். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி பிரதமர் பதவி வகிப்பது உறுதியாகி இருக்கிறது. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடரப்போவது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் மோடி இந்திய அரசியலில் காங்கிரசுக்கு எதிராக புதிய சாதனையை உருவாக்கி இருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


