சுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      இந்தியா
supreme court 2019 05 07

புது டெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக அனிருதா போஸ், போபண்ணா, பூஷன் ராமகிருஷ்ணா கவாய், சூர்யகாந்த் ஆகியோர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். 

சுப்ரீம் கோர்ட்டில் காலியாக இருந்த 4 பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்தார். அதன்படி நீதிபதிகளாக ஆர்.எஸ்.கவாய், சூரியகாந்த், அனிருதா போஸ், போபண்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், புதிய நீதிபதிகள் 4 பேரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் முன்னர் 27 பேராக இருந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 31 பேராக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து