இளையான்குடி அருகே அய்யம்பட்டியில் மஞ்சுவிரட்டு

செவ்வாய்க்கிழமை, 28 மே 2019      சிவகங்கை
28 m anzuviratu

இளையான்குடி.-.இளையான்குடி அருகே உள்ள அய்யம்பட்டியில் ஸ்ரீகலுங்கு முணீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு 300க்கும் மேற்ப்பட்ட காளைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கு கொண்ட மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. மருத்துவகுழுவினர் மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அய்யம்பட்டி கிராமத்தில் இருந்து அலங்கார பொருட்களுடன் கிராமபொதுமக்கள் ஊர்வலமாக ஸ்ரீகலுங்கு முணீஸ்வரர் கோவிலுக்கு வந்து தீபாராதனை செய்து சாமிகும்பிட்ட பின் மஞ்சுவிரட்டுக் காளைகள் முறைப்படி வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்பட்டது வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.தமிழக அரசின் அனுமதியுடன் நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியாதலால் சிவகங்கை மாவட்ட கோட்டாட்சியர் செல்வகுமாரி மாவட்ட வருவாய் அலுவலர் லதா டிஎஸ்பி அப்துல்கபூர் வட்டாட்சியர் பாலகுரு ஆகியோர் தலைமையில் வருவாய்துறையினர் காவல்துறையினர் மருத்துவகுழுவினரின் மேற்பார்வையில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியினை கோவிலின் டிரஸ்டி இராசுஉடையார் மற்றும் கிராமதலைவர் தமிழ்மாறன் ஆகியோர் செய்திருந்தனர்.மஞசு விரட்டினை சுற்றுவட்hர கிராமமக்கள் கண்டுகளித்தனர்.
கிடாவெட்டி நேர்த்திகடன்
இளையான்குடி.மே.29.இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் பைரவர்; கோவிலில் பைரவருக்கு 55;கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்தினர் இந்த பெரும் பூஜையில் வடக்கு சாலைக்கிராமம் குயவர்பாலையம் துகவூர் சமுத்திரம் புதுக்குளம் ஆகிய கிராமத்தை சோந்த மக்கள் வழிபாடு செய்தனர்இவ்விழாவினை முன்னிட்டு கருப்பசாமி தெட்னாமூர்த்தி துர்க்கைஅம்மன் நந்திதேவர் விக்னே~;வர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிசேகஆராதனைகள் செய்தனர்அதன் பின்பு பக்தர்களுக்கு கறிவிருந்து பரிமாரப்படடது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து