முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: ஹால்டிக்கெட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

செவ்வாய்க்கிழமை, 28 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் (தட்கல் உட்பட) இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால்டிக்கெட்...

இது குறித்து அரசுத்தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறி்ப்பு வருமாறு:-

வரும் ஜூன் மாதம் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்  www.dge.tn.gov.in என்ற இணையத்தளதிற்கு சென்று ஹால்டிக்கெட் என்ற வாசகத்தினை கிளிக் செய்ய வேண்டும். கீழ்க்குறிப்பிட்ட வகைத்தேர்வர்களுள் தாங்கள் எந்த வகையினை சார்ந்தவர் என்பதை பொறுத்து கீழ்க்காணும்வழிமுறைகளை பின்பற்றி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பழைய நடைமுறையில் (மொத்த மதிப்பெண்கள் 1200) தேர்வு எழுதுவோர் திரையில் தோன்றும் பக்கத்தில் HSEJUNE 2019 SECOND YEARHALL TICKET DOMNLOAD என்ற வாசகத்தினை CLICK செய்யவேண்டும்.

புதிய நடைமுறை...

மார்ச் 2019 பிளஸ் 2 பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்து தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள், மார்ச் 2019 பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தேர்வுக் கூட ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரடியாக ஜூன் 2019 தேர்விற்கு விண்ணப்பித்தோர் தமது விண்ணப்ப மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தேர்வுக் கூடஅனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய நடைமுறையில் (மொத்த மதிப்பெண்கள் 600) தேர்வு எழுதுவோர் திரையில் தோன்றும் பக்கத்தில் HSE JUNE SECONYEAR HALL TICKET DOWNLOAD NEW PATTERN 600 MARKS) என்ற வாசகத்தினை click செய்ய வேண்டும். ஜூன் 2019 சிறப்புத் துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணைய www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து