அருப்புக்கோட்டையில் ஏ.டி.எம் மையத்தில் தீடீரென தீ விபத்து மிசின்-ரூ.7 லட்சம் எரிந்து நாசம்

புதன்கிழமை, 29 மே 2019      விருதுநகர்
29 atm fire

அருப்புக்கோட்டை -= அருப்புக்கோட்டையில் ஏ.டி.எம் மையத்தில் நேற்று அதிகாலையில் தீடீரென தீ பிடித்து எரிந்ததில் ஏ.டி.எம். அறை, மிசின், ரூ.7 இலட்சம் ரூபாய் பணம் எரிந்து நாசம் ஆனது.
 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் சிவன் கோவில் ;அருகில் தனியாருக்கு சொந்தமான வனிக வளாகம் உள்ளது. இதன் கீழ் தளத்தில் எச்.டி.எப்.சி வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வந்தது. இந்த வங்கியின் காவலாளியாக அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை 5.30மணியளவில் ஏ.டி.எம் மையத்தில் உள்ளே இன்வெட்டர் அறையில் கரும்புகையுடன் தீ பிடித்தது. அதை காவலாளி அணைக்க நினைத்தார் முடியவில்லை. இதை அடுத்து காவலாளி கார்த்திக் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையம் மற்றும் டவுண் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வண்டி காலதாமதமாக வந்தது. அதற்குள் ஏ.டி.எம் மையத்தில் ஏசி சிலிண்டர் வெடித்து ஏ.டி.எம் அறை முழுவதும் பரவியது. அதனைபின் காலதாமதமாக வந்த தீயணைப்பு துறையினர் ஒருமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ஏ.டி.எம் அறை முழுவதும் எரிந்தும், ஏ.டி.எம் எந்திரமும் அதிலிருந்து ரூ7இலட்சம் ரூபாயிம் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து டவுண் இன்ஸ்ச்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார். ஏ.டி.எம் மையம் தீபிடித்து எரிந்தது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாடி    

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து