முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வியாழக்கிழமை, 30 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை - வேலூர்...

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், அனந்தலை கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (லேட்) மனைவி துளசியம்மாள் கடந்த 18.4.2019 அன்று  நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், வாக்களிக்க வாக்கு சாவடிக்கு வந்த போது, வாக்குச்சாவடியிலேயே மயங்கி  விழுந்து, பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், சிவகிரி கிராமத்தைச் சேர்ந்த சடையப்ப கவுண்டரின் மகன் முருகேசன் கடந்த 18.4.2019 அன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த போது, மயக்கமடைந்து கீழே விழுந்தவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கடையம் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமியின் மனைவி செண்டு கடந்த 18.4.2019 அன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களித்து விட்டு வெளியே வரும் போது, வாக்குசாவடி அருகே மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

கோவை - சேலம்...

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், குருங்களூர் கிராமத்தைச் சேர்ந்த ராமனின் மனைவி மல்லிகா கடந்த  18.4.2019 அன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்களிக்க வாக்குசாவடிக்கு வந்த போது, வாக்கு சாவடி வாசற்படியிலேயே மயங்கி விழந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மயில்சாமி(லேட்) மனைவி அய்யம்மாள் கடந்த  18.4.2019 அன்று  நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் போது, மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், பெரியேரிப்பட்டி குரூப், வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரப்ப கவுண்டரின் மகன்  கிருஷ்ணன் கடந்த 18.4.2019 அன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில், வாக்களித்து விட்டு வெளியே வரும் போது, மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மதுரை - சேலம்...

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், திம்மநத்தம் கிராம உட்கடை துரைச்சாமிபுரம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த மொக்கைச்சாமி (லேட்) மனைவி முத்துப்பிள்ளை கடந்த 18.4.2019 அன்று நடந்த மக்களவை தேர்தலில் வாக்களித்து விட்டு வெளியே வரும் போது, மயக்கமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், ஆவடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொம்மண்ண செட்டியார் மகன் ஜனார்த்தனன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் . மேற்கண்ட செய்தியையும் அறிந்து  நான் மிகுந்த வேதனை அடைந்தேன். பல்வேறு இடங்களில், உடல் நலக்குறைவு ஏற்பட்டு, உயிரிழந்த எட்டு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலா 1 லட்சம் ரூபாய்...

மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 8 நபர்களின் வறிய நிலையைக் கருத்தில் கொண்டு, உயிரிழந்வர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து