Idhayam Matrimony

வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: மம்தா

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      அரசியல்
Image Unavailable

கொல்கத்தா, வாக்குச்சீட்டு முறையிலான தேர்தலை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு மம்தா பானர்ஜி யோசனை தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில், மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 22 தொகுதிகளில் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த பின்னடைவு குறித்து விவாதிக்க கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டியிருந்தார். கூட்டத்தில், தேர்தல் முடிவுகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர், மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயகத்தை நாம் காப்பாற்ற வேண்டி உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை நாங்கள் விரும்பவில்லை. ஓட்டுப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு குறித்த விவரங்களை கண்டறிய உண்மை கண்டறியும் குழு அமைக்க வேண்டும். வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோருகிறோம். இதற்காக ஒரு போராட்ட இயக்கம் தொடங்கப் போகிறோம். அதை மேற்கு வங்காளத்தில் இருந்து தொடங்குவோம். எதிர்க்கட்சி வரிசையில் உள்ள 23 கட்சிகளையும் நான் கேட்டுக் கொள்கிறேன். வாக்குச்சீட்டு முறையிலான தேர்தலை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு நீங்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் கூட ஓட்டுப்பதிவு எந்திரங்களை தடை செய்துள்ளன. மேற்கு வங்காளத்தில் 18 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு இடதுசாரி கூட்டணியே காரணம். இருப்பினும், எங்கள் ஓட்டு வங்கியை 4 சதவீதம் அதிகரித்துள்ளோம். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து