முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் கோதண்டராமர் கோயிலில் விபீஷணர்க்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி:

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- ராமேசுவரம் திருக்கோயிலில் ராமலிங்கபிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு  விபிஷணர்க்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி  செவ்வாய்க் கிழமை நடைபெற்றது .  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ராமலிங்கபிரதிஷ்டை திருவிழா சிறப்பூஜையுடன்  திங்கள் கிழமை தொடங்கியது.திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் திருவிழாவான  விபீஷணர்க்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சியையொட்டி செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 முதல் 6 மணி வரை திருக்கோயிலில் ஸ்படிலிங்கம் பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளும்,தீபாராதனையும் நடைபெற்றது.இதனை தொடர்ந்து திருக்கோயிலிருந்து காலை 7 மணிக்கு சுவாமி  ராமர்,லெட்சுமணன்,சீதை,ஆஞ்சநேயர்,ஜாம்போவான் தங்க கேடயத்திலும்,விபீஷணர் கேடயத்திலும் எழுந்தருளினர். பின்னர் திருக்கோயில் நடைகள் சாத்தப்பட்டன.இதையடுத்து  சுவாமிகள் தெற்குரத வீதி, திட்டகுடி,வர்த்தகன் தெரு வழியாக தனுஸ்கோடிக்கு பகுதிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள திருக்கோயிலின் உப கோயிலான கோதண்டராமர்  கோயிலுக்கு பகல் 12 மணிக்கு சென்றடைந்தது.அங்கு திருக்கோயில் மூத்த குருக்கள் உதயகுமார் தலைமையில் சிறப்பு பூஜைகளும்,தீபாராதனையும் நடைபெற்றது.பின்னர் திருக்கோயில் குருக்கள் ஸ்ரீராம் விபீஷணர்க்கு பரிவட்டம் கட்டி பட்டாபிஷேக நிகழச்சியை நடத்தி வைத்தார்.அதன் பின்னர் சுவாமி விபீஷணர்க்கு சிறப்பு பூஜைகளும்,தீபாராதனையும் நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் கல்யாணி,உதவிக்கோட்ட பொறியாளர் மயில்வாகனன், மேலாளர் முருகேசன்,கண்காணிப்பாளர்கள் ககாரீன்ராஜ்,பாலசுப்பிரமணியன்,இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன்,திருக்கோயில் பேஷ்கார்கள் அண்ணாதுரை,கண்ணன்,செல்லம்,கலைச்செல்வம், மற்றும் திருக்கோவில் பணியாளர்களும், பக்தர்களும் கலந்துகொண்டனர்.                                                  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து