Idhayam Matrimony

இங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு - 4-வது முறையாக நிராகரிப்பு

புதன்கிழமை, 12 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

லண்டன் : நிரவ் மோடியின் ஜாமீன் மனு, இங்கிலாந்து நீதிமன்றத்தால் நான்காவது முறையாக நிராகரிக்கப்பட்டது.

தப்பி ஓட்டம்...

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி (48), அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக அவர்மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பாகவே அவர் நாட்டில் இருந்து தப்பி விட்டார். அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.

சிறையில் அடைப்பு...

இந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த மார்ச் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். 20-ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தரப்பில் ஜாமீன் மனு தாக்கலானது. ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்துவிட்டார். அதைத்தொடர்ந்து நிரவ் மோடி சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீன் மனு தாக்கல்...

அவரது நீதிமன்றக்காவல், கடந்த மார்ச் 29-ம் தேதி முடிந்தது.  அன்றைய தினம் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.  சாட்சியங்களை கலைத்து விடுவார் என இந்திய தரப்பில் வாதிடப்பட்டது.  அதனால் லண்டன் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மூன்றாவது முறையும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

மீண்டும் நிராகரிப்பு...

இந்நிலையில், நிரவ் மோடி ஜாமீன் கோரி இங்கிலாந்தின் ராயல் கோர்ட் முன் நான்காவது முறையாக நேற்று ஆஜரானார். ஏற்கனவே மூன்று முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், 4வது முறையாக இன்றும் அவரது ஜாமீன் மனுவை இங்கிலாந்து கோர்ட் நிராகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து