முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் 119 ஆண்டு பழமையான காரை ஓட்டிய சச்சின் டெண்டுல்கர் !

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : லண்டன் நகரில் 119 ஆண்டுக்கால் பழமையான வின்டேஜ் காரை சச்சின் டெண்டுல்கர் ஓட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லீக் போட்டிகள்...

உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அரையிறுதிப் சுற்றுக்கு எந்த அணி முன்னேறும் என்று கணிக்க முடியாத அளவிற்கு லீக் போட்டிகளின் முடிவுகள் உள்ளது.இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளின் வர்ணனையாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார். லண்டனில் உள்ள பிரபல ராயல் ஆட்டோ மொபைல் கிளப்பிற்கு சச்சின் அவர் சென்றுள்ளார்.

வின்டேஜ் கார்...

அப்போது அங்கிருந்த பழமையான காரை சச்சின் ஓட்டி மகிழ்ந்துள்ளார். மிகவும் பழமையான அந்த கார் 4 கியர்களை கொண்டுள்ளது. அந்த காரின் அதிகபட்ச வேகம் 25 கி.மீ. தான். காரை எப்படி இயக்க வேண்டுமென அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த நபர் சச்சினுக்கு பயிற்சி அளித்தார். லண்டன் சாலைகளில் பழமையான வின்டேஜ் காரை இயக்கியதை பின் சீட்டில் அமர்ந்திருந்த அவரது மனைவி அஞ்சலி செல்போனில் வீடியோ எடுத்தார். சச்சின் வின்டேஜ் கார் ஓட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் மிகவும் பழமையான காரை ஓட்டியது மனதிற்கு சந்தோஷத்தை தருகிறது. இதற்கு காரணமாக இருந்த ராயல் ஆட்டோ மொபைல் கிளப்பிற்கும், தனக்கு உதவியாக இருந்த தோழருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து