அபார பந்து வீச்சால் 5 விக்கெட்டை வீழ்த்திய இந்திய வீரர் முகமது ஷமி

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      விளையாட்டு
Mohammad Shami 5 wickets 2019 06 30

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட் கைப்பற்றிய இந்தியாவின் ஷமி, தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

பர்மிங்காமில் நடக்கும் உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவரில் 337 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய பேர்ஸ்டோவ் (111) சதம் கடந்தார். வேகத்தில் மிரட்டிய இந்தியாவின் முகமது ஷமி, 10 ஓவரில், 69 ரன் வழங்கி, 5 விக்கெட் கைப்பற்றினார்.  இதன்மூலம் இவர், ஒருநாள் போட்டி அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன், சமீபத்தில் மான்செஸ்டரில் நடந்த விண்டீசுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் 6.2 ஓவரில், 16 ரன் வழங்கி 4 விக்கெட் வீழ்த்தியது இவரது சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து