முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் சர்வதேச மணல் சிற்பப் போட்டி - சுதர்சன் பட்நாயக் பங்கேற்பு

திங்கட்கிழமை, 1 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெறும் சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல கலைஞர் சுதர்சன் பட்நாயக் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி, மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார். இவரது பெரும்பாலான ஓவியங்கள் சமூக விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் அமைந்திருக்கும். ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த சர்வதேச மணற்சிற்ப போட்டியில் சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

இதேபோல், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சுமார் 60 போட்டிகளில் பங்கேற்ற சிறப்பை பெற்றுள்ள சுதர்சன் பட்நாயக், உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் இடம்பெற்றதுடன் தாய்நாட்டுக்கு பல்வேறு விருதுகளை பெற்றுத் தந்துள்ளார். இவரை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினை அளித்து கவுரவித்துள்ளது. இந்நிலையில், வரும் ஜூலை மாதம் 21-ம் தேதியில் இருந்து 28-ம் தேதிவரை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகின்றது. 15 நாடுகளை சேர்ந்த பிரபல கலைஞர்கள் கலந்துகொள்ளும் இந்த போட்டியில் பங்கேற்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பையேற்று, இந்தியாவின் சார்பில் சுதர்சன் பட்நாயக் விரைவில் அமெரிக்கா செல்கிறார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து