இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஸ்டீவ் வாக் நியமனம்

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      விளையாட்டு
Steve Waugh 2019 05 24

மெல்போர்ன் : ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக ஆஸ்திரேலியா ஸ்டீவ் வாக்கை ஆலோசகராக நியமித்துள்ளது.

வென்றது கிடையாது...

இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த உடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா 2001-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஆஷஸ் தொடரை வென்றது. அதன்பின் இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்றது கிடையாது.

டிம் பெய்ன் வரவேற்பு...

அப்போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் வாக் இருந்தார். அவரது ஆலோசனை அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. இதனால் ஸ்டீவ் வாக்கை ஆலோசகராக நியமித்துள்ளது ஆஸ்திரேலியா. ஸ்டீவ் வாக்கை ஆலோசகராக நியமித்ததை டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் வரவேற்றுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து