ஆப்கனில் பயங்கர மோதல்: தலிபான் பயங்கரவாதிகள் உட்பட 19 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      உலகம்
Afghanistan attack 2019 07 07

 காபூல் : ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 19 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள கராக் மாவட்டத்தில் பாதுகாப்பு படை சோதனை சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் திடீரென புகுந்தனர். அங்கிருந்தோரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.  இந்த மோதலில் பாதுகாப்பு படையினர் 9 பேர், தலிபான் பயங்கரவாதிகள் 10 பேர் பலியாகினர். இதில் தலிபான் இயக்கத்தின் தளபதி முல்லா கவுசூதிங்கும் ஒருவர் என தகவல்கள் வெளியானது. மேலும் 15 பயங்கரவாதிகள், 6 பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கியுள்ள தலீபான் பயங்கரவாதிகளைத் தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து