முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எக்ஸ் தளத்தில் கார்த்திகை தீபம் வாழ்த்து பதிவை நீக்கி மீண்டும் பதிவிட்ட செங்கோட்டையன்

வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2025      தமிழகம்
Sengottaiyan 2023-04-20

கோபிசெட்டிபாளையம், எக்ஸ் தளத்தில் கார்த்திகை தீபம் வாழ்த்து பதிவை நீக்கிய நிலையில் செங்கோட்டையன் மீண்டும் அதே பதிவை பதிவிட்டுள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் த.வெ.க.வில் கடந்த வாரம் இணைந்தார்.   அவருக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்புகளை விஜய் வழங்கினார். அதைத்தொடர்ந்து கோபி அருகே கரட்டூரில் உள்ள  செங்கோட்டையன் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில் விஜய் புகைப்படத்துடன் முன்னாள் முதல் அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டது. இது அ.தி.மு.க.வினர் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில்,  தனது முகநூல், எக்ஸ் பக்கத்தில் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்து தெரிவித்து  இருந்தார் செங்கோட்டையன். அதில், அண்ணா, காமராஜர், வேலுநாச்சியார், பெரியார், அம்பேத்கார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ப்டங்களும் இடம் பெற்று இருந்தது. 

செங்கோட்டையனுக்கு விஜய் சால்வை அணிவிப்பது போன்ற படமும் இருந்தது. த.வெ.க.வில் இணைந்த நிலையில் செங்கோட்டையன் வெளியிட்ட இந்த சமூக வலைத்தள பதிவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெற்று இருந்தது,  சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கார்த்திகை தீபத்திற்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டு இருந்த பதிவை செங்கோட்டையன் நீக்கினார். பின்னர் மீண்டும் எந்தவித மாற்றமின்றி அவர் அதே பதிவை தற்போது பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து