முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த அதிபர் ட்ரம்ப்: வீடியோ இணையத்தில் வைரல்

வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2025      உலகம்
Trump

வாஷிங்டன், அமைச்சரவை கூட்டத்தில் தூங்கிய ட்ரம்ப் வீடியோ இணையத்தில் வைரல்லானது.

அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக கடந்த ஜனவரியில் குடியரசு கட்சியை சேர்ந்த ட்ரம்ப் பதவியேற்றார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் உள்துறை மந்திரி மார்க் ரூபியோ, ராணுவ மந்திரி பீட்டர் ஹெக்சேத் உள்ளிட்ட அனைத்து இலாகா மந்திரிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம், பொருளாதார நடவடிக்கை போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தூங்கி வழிந்தார். மார்க் ரூபியோ உள்ளிட்ட அமைச்சர்கள் ட்ரம்பின் நிர்வாகத்திறன் குறித்தும், போர் நிறுத்த நடவடிக்கைகளின் ட்ரம்பின் ராஜதந்திரம் குறித்தும் புகழ்ந்து தள்ளினர்.

இருப்பினும் அவற்றை ஏதுவும் காதில் வாங்காமல் ட்ரம்ப் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றார். ஒருசில சமயம் 15 நொடிகளுக்கு மேல் கண்களை மூடியபடி தலையை தொங்கவிட்டு தூங்கினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ட்ரம்புக்கு 79 வயதாவதால் உடல் நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தான் இவ்வாறு தூங்கி வழிகிறார் எனவும் வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. இதனை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. ட்ரம்ப் நலமுடன் இருப்பதாகவும், 3 மணிநேர மாரத்தான் கூட்டத்தை ட்ரம்ப் வெற்றிகரமாக கையாண்டதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து