முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 9-ம் தேதி புதுச்சேரியில் விஜய் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. மனு

வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2025      தமிழகம்
Vijay 2023-12-30

புதுச்சேரி, ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், டிச.9-ல் புதுச்சேரியில் விஜய் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி எஸ்எஸ்பியிடம் த.வெ.க.வினர் நேற்று மனு அளித்துள்ளனர்.

புதுச்சேரியில் த.வெ.க. தலைவர் விஜய் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்க அனுமதி கோரி த.வெ.க.வினர் டிஜிபி அலுவலகத்தில் கடந்த வாரம் மனு அளித்தனர். ஆனால் காவல் துறை ரோடு ஷோவுக்கு அனுமதி தரவில்லை. இதையடுத்து, டிஜிபி அலுவலகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள், முதல்வர் ரங்கசாமியை அவரது வீடு மற்றும் சட்டப்பேரவை அலுவலகத்தில் ஐந்து முறை வரை பல நாட்களாக த.வெ.க. பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் தொடர்ந்து சந்தித்தார். நடுவில் ஒருநாள் அவருடன் ஆதவ் அர்ஜுனாவும் வந்தார். ஆனால், காவல் துறை கரூர் சம்பவம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி அனுமதி தரவில்லை.

நகர்பகுதி வழியாக விஜய் செல்லும் ரோடு ஷோவை மாற்றி ஈசிஆரில் ஒன்றரை கி.மீ தொலைவுக்காவது ரோடு ஷோ நடத்த புஸ்ஸி ஆனந்த், முதல்வர் ரங்கசாமியிடம் அனுமதி தர கோரினார். ஆனால், காவல் துறை அதற்கு அனுமதி தரவில்லை. ஐந்து முறை முயன்றும் ரோடு ஷோவுக்கு அனுமதி கிடைக்காமல் புஸ்ஸி ஆனந்த் திரும்பினார். இந்நிலையில், எஸ்எஸ்பி கலைவாணனிடம் த.வெ.க.வினர் பொதுக் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி கடிதம் அளித்தனர்.

அதில், வரும் டிசம்பர் 9-ம் தேதி உப்பளம் துறைமுக மைதானத்தில் விஜய் பங்கேற்கும் த.வெ.க. பொதுக் கூட்டம் நடத்த அனுமதி தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இதில் காலை 7 முதல் மாலை 6-க்குள் நேரம் ஒதுக்கி தரவும் கோரியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து