முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திகை தீபத்திருவிழா: பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      ஆன்மிகம்
Palani 2023-08-21

Source: provided

பழனி : கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது

பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் வெகுசிறப்புடன் நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 7-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின் சண்முகார்ச்சனை, சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 6.45 மணிக்கு தங்க சப்பரத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதையடுத்து யாகசாலையில் இருந்து பரணி தீபம் மூலவர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரணி தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் 6 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரருக்கு சிறப்பு அலங்காரம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து 6.45 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகார உலா நிகழ்ச்சி நடந்தது. பின்பு 7.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெற்றது.

இந்நிலையில் திருவிழாவில் நேற்று (புதன்கிழமை) பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெற்றது. 

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் கார்த்திகை திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில் பக்தர்கள் வருகைக்கு ஏற்ப, பிற்பகல் 2 மணியளவில் குடமுழுக்கு அரங்கம் நுழைவு வாயில் தற்காலிகமாக அடைக்கப்பட்டன. தொடர்ந்து மீண்டும் மாலை 6 மணிக்கு மேல் தரிசனத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து