Idhayam Matrimony

டெல்லி காற்றுமாசு விவகாரம்: பார்லி., வளாகத்தில் முகக்கவசம் அணிந்து எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2025      இந்தியா
Parliment-Mp-2025-12-04

டெல்லி, டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாராளுமன்ற வளாகத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டெல்லியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நீட்டித்து வருகின்றது. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். 

இந்த நிலையில், பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் நான்காம் நாள் அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக இண்டியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், முகக்கவசம் அணிந்து இண்டியாகூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் பாராளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமையும், புதிய தொழிலாளர்கள் சட்டத்துக்கு எதிராக புதன்கிழமையும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து