Idhayam Matrimony

ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மிக பயணம் துவக்கம்

வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2025      தமிழகம்
rameswaram-new

ராமேசுவரம், நாகை, மயிலாடுதுறையில் இருந்து ஆன்மிக பயணத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.;

ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ள, ஏழை எளிய முதியோர்களுக்காக ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மிக சுற்றுலா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மண்டலம் வாரியாக இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அவ்வகையில் 2025-2026-ம் ஆண்டின் ஆன்மிக சுற்றுலாவிற்காக நாகை மண்டலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேற்று பயணத்தை தொடங்கினர். இந்து சமய அறநிலைத்துறை நாகை மண்டல இணை ஆணையர் குமரேசன் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். நாகை மண்டலத்தில் நாகை, திருவாரூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 30 பக்தர்கள் பயணம் செய்கின்றனர். 

இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பக்தர்களின் ஆன்மிக பயண தொடக்க நிகழ்ச்சியும் நேற்று நடந்தது. மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட யாத்திரையை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நேற்று புறப்பட்ட பக்தர்கள் வேன் மூலம் ராமேஸ்வரம் வரை அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து ரெயிலில் காசிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து