முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்தடுத்த இரு போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களில் விராட் கோலி முதலிடம்

வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2025      விளையாட்டு
Virat-Kohli 2023 08 11

ராய்ப்பூர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்த இரு போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அவர் இதுவரை 11-முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசி உள்ளார்.

பந்துவீச்சு தேர்வு...

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடரின் 2-வது போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நடந்தது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. கெய்க்வாட் (105 ரன்கள்), விராட் கோலி (102 ரன்) சதம் விளாசினர். முதலாவது போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

மார்க்ரம் அபாரம்...

பின்னர் 359 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 110 ரன்கள் விளாசினார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. முதலாவது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 6-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

11-வது முறை...

இந்த தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 2 போட்டிகளிலும் விராட் கோலி சதம் விளாசியுள்ளார். முதலாவது ஆட்டத்தில் 135 ரன்கள் விளாசிய விராட் கோலி, 2-வது ஆட்டத்தில் 102 ரன்கள் எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் கோலி சதம் காண்பது இது 11-வது முறையாகும். இந்த வித்தியாசமான சாதனையில் யாரும் எட்ட முடியாத இடத்தில் விராட் கோலி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் 6 முறை அடுத்தடுத்த ஆட்டங்களில் சதம் கண்டுள்ளார். 

தெண்டுல்கர் சாதனை சமன் 

தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியிலும் சதமடித்ததால் விராட் கோலி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்துள்ளார். ராய்ப்பூர் மைதானத்தில் விராட் கோலி அடித்த சதம், அவரது 53-வது சதமாகும். இதையும் சேர்த்து ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் 34 இடங்களில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் அதிக வெவ்வேறு இடங்களில் சதம் அடித்தவரான சச்சின் தெண்டுல்கரின் சாதனையை (இவரும் 34 இடத்தில் சதம்) சமன் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து