Idhayam Matrimony

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி விவகாரம்: பிரதமர் நரேந்திரமோடி விளக்கமளிக்க மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2025      இந்தியா
Mallikarjuna-Karke 2023 02

புதுடெல்லி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று காலை வர்த்தக நிலவரப்படி 28 பைசாக்கள் சரிந்து 90.43 ஆக இருந்தது. இந்நிலையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை காட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

இந்திய ரூபாய் மதிப்பு ஏற்கனவே 90-ஐ தாண்டிவிட்டது. அரசாங்கம் எவ்வளவுதான் முரசு கொட்டினாலும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது நாட்டின் உண்மையான பொருளாதார நிலை என்ன என்பதை காட்டுகிறது. மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் சரியாக இருந்திருந்தால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையாது.

2014-க்கு முன்பு ‘இந்தியாவின் ரூபாய் அதன் மதிப்பை இழக்க காரணம் என்ன? இதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். நாடு உங்களிடம் இருந்து பதிலைக் கோருகிறது' என்று மோடி கேட்டார். நேற்று நாங்கள் மோடியிடம் அதே கேள்வியை கேட்கிறோம். அவர் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து