எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது. அதன்படி கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,020-க்கும், சவரன் ரூ.96,160-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி (ஒரு சவரன் ரூ.97,600) புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது.
கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 40-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை நேற்று முன்தினம் கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.201-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்து விற்பனையானது. அதன்படி கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,020-க்கும், சவரன் ரூ.96,160-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று உயர்ந்து விற்பனையானது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூபாய் ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்த்திற்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


