எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளை மாளிகையின் கீழ்தள பகுதியிலும் மழைநீர் புகுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அந்நாட்டு நேரப்படி நேற்று முன்தினம் காலை கனமழை பெய்தது. ஒரு மாதத்திற்கு பெய்யும் மழை ஒரு மணி நேரத்தில் கொட்டித் தீர்த்ததால் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் திடீரென காட்டாறு போல பாய்ந்த வெள்ளத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர். மழைநீர் வழிந்தோடி செல்ல வழியில்லாததால், இது போன்ற திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சாலைகளில் சென்ற கார்கள் இந்த எதிர்பாராத வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு ஆங்காங்கே நின்றது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
ஆர்லிங்டனில் மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றில் மேற்கூரை வழியாக தண்ணீர் கொட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மீட்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டனர். சில இடங்களில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்கள் மோட்டார் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். நீரிறைக்கும் எந்திரங்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றன. கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கின் பாதிப்புகள் வெள்ளை மாளிகையையும் விட்டு வைக்கவில்லை. வெள்ளை மாளிகையின் கீழ் தளத்தில் மழைநீர் புகுந்தது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. திடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள், சில கட்டுமானங்கள், வாகனங்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், யாருக்கும் காயமோ வேறு பாதிப்புகளோ ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


