Idhayam Matrimony

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மே. வங்க காங். தலைவர் ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித்தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அவர் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே பிற தலைவர்களும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள். தேர்தலில் மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா, அப்போதே பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஆனால், சக நிர்வாகிகள் அதற்கு உடன்படவில்லை.

இந்நிலையில், ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருப்பதால், சோமன் மித்ராவும் தனது ராஜினாமா கடிதத்தை மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரை மேற்கு வங்காள காங்கிரஸ் விவகாரத்தை கவனிக்கும் மேலிட பொறுப்பாளர் கவுரவ் கோகாய் நேரில் சந்தித்தார். மித்ராவின் ராஜினாமா ஏற்கப்படவில்லை என்றும், தொடர்ந்து பணியாற்றுமாறும் கேட்டுக் கொண்டார். புதிய தேசிய தலைவர், மாநில கமிட்டிகளை மாற்றி அமைக்கும்போது, மாநில தலைவர்களை மாற்றுவது பற்றியும் முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து