எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : டோனி உங்களுக்கு என்னுடைய ஒரு அன்பான கோரிக்கை. ஓய்வு குறித்து எந்த எண்ணமும் உங்கள் மனதில் வர வேண்டாம் என்று பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
2019 ஐ.சி.சி உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பின்னர், டோனி குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. டோனி மைதானத்தில் இருக்கும் வரை நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி நிச்சயமாக வெற்றி பெறும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் இருந்தன. ஏன் எதிர் அணியினர் கூட டோனி இருக்கும் வரை வெற்றியை குறித்து நினைத்து பார்க்கவில்லை என்பதே உண்மை. ஆனால் டோனி அவுட் ஆனதும் இந்தியாவின் நம்பிக்கைகள் முறிந்தன. டோனி நோ-பாலில் அவுட் செய்யப்பட்டார் என்று ஒருபுறம் விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. மற்றொரு புறத்தில் டோனி எப்பொழுது ஓய்வு பெறுகிறார்? என்ற சர்ச்சையும் நடந்து கொண்டிருக்கிறது.
டோனியின் ஓய்வு குறித்த கேள்வி சாதாரண கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையில் மட்டுமல்ல. இந்திய கேப்டன் விராட் கோலியிடமும் கேட்கப்பட்டது. தோல்விக்குப் பின்னர் கோலி பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு வந்த போது, ஒரு பத்திரிகையாளர், உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்லும். டோனி ஓய்வு குறித்த செய்திகள் பரவி வருகின்றன. அவர் ஓய்வு பெறப் போகிறார் என்று கூறப்படுகிறது. இது குறித்து டோனி உங்களிடம் அல்லது அணி குழுவினரிடம் சொல்லியிருக்கிறார்களா? என கேட்டார். அதற்கு விராட் இல்லை, அவர் இதுவரை ஓய்வு குறித்து எதுவும் சொல்லவில்லை என்றார்.
இந்த நிலையில், இசைச்குயில் பாடகி லதா மங்கேஷ்கர் டோனி ஓய்வு பெறுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், வணக்கம் டோனி, சில நாட்களாக நான் கேள்வி படுகிறேன். நீங்கள் (டோனி) ஓய்வு பெறப்போகிறீர்கள் என்று. தயவு செய்து ஓய்வு பற்றி நீங்கள் நினைக்க வேண்டாம். நாட்டுக்கு உங்களோட அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டு ரொம்ப முக்கியம். உங்களிடம் என்னுடைய ஒரு அன்பான கோரிக்கை. ஓய்வு குறித்து எந்த எண்ணமும் உங்கள் மனதில் வர வேண்டாம் என்று அதில் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


