முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழுமலையானிடம் வேண்டியது பலித்து விட்டது - 10 ஆண்டுக்கு பிறகு பொறுப்பேற்ற அதிகாரி நெகிழ்ச்சி

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி திருமலையில் 10 ஆண்டுக்குப்பிறகு மீண்டும் பொறுப்பேற்ற சிறப்பு நிர்வாக அதிகாரி, ஏழுமலையானிடம் வேண்டியது பலித்து விட்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

திருப்பதி தொடர்பான அனைத்து வி‌ஷயங்களையும் கவனித்துக்கொள்ள இணை நிர்வாக அதிகாரி பொறுப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை ஆந்திர மாநில அரசு நியமிப்பது வழக்கம்.ஆந்திராவில் சட்டசபை தேர்தல் நடந்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்-அமைச்சர் பதவி ஏற்றவுடன் திருப்பதியில் நிர்வாக பொறுப்புக்காக இணை நிர்வாக அதிகாரிக்கு பதில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது.

ஆந்திர முதல்-அமைச்சராக ராஜசேகர ரெட்டி இருந்தபோது திருப்பதி சிறப்பு அதிகாரியாக பணியாற்றி பாதுகாப்பு துறையில் உடைமைகள் பிரிவு அதிகாரியாக பணியாற்றிய தர்மா ரெட்டி மீண்டும் திருப்பதி மலையில் சிறப்பு அதிகாரியாக பணியமர்த்தப்படுவர் என்று தகவல் பரவியது.அதன் அடிப்படையில் 3 நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தர்மா ரெட்டி நேற்று முன்தினம் மாலை திருப்பதிக்கு வந்தார். திருப்பதியில் இருந்து பாதயாத்திரையாக நடந்து மலையேறி வந்த அவர் நேற்று ஏழுமலையானை வழிபட்டு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் சிறப்பு அதிகாரியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

பின்னர் கோவிலுக்கு வெளியே தர்மா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

இதற்கு முன்னர் 4½ ஆண்டுகள் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியபோது பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தேன். பணியிடம் மாற்றலாகி இங்கிருந்து சென்றபோது மிகுந்த மனவேதனையுடன் புறப்பட்டு சென்றேன்.
அப்போது முதல் நானும் என் மனைவியும் திருப்பதி மலையில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ஏழுமலையானிடம் வீட்டின் பூஜை அறையில் தினமும் காலை நேரத்தில் வேண்டிக் கொண்டோம். எங்களது வேண்டுதல் பலித்து மீண்டும் திருப்பதி சிறப்பு அதிகாரியாக 10 ஆண்டுக்கு பிறகு பொறுப்பேற்று இருக்கிறேன்.ஆந்திர மாநில அரசின் உத்தரவுக்கு ஏற்ப, தேவஸ்தான அறங்காவலர் குழு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஆகியோரின் வழி காட்டுதலின்படி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் மும்மரமாக ஈடுபடுவேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து