Idhayam Matrimony

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக்., நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 80 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2026      உலகம்
Suicide 2023 04 29

இஸ்லாமாபாத், ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இஸ்லாமாபாத், பஜவுர், பன்னு ஆகிய இடங்களில் நடந்த தொடர் தற்கொலைப் படைத் தாக்குதல்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் மக்கள் பாதுகாப்புப் படையினருடன் உறுதியாக நிற்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தகவல் ஒலிபரப்பு நாடாளுமன்றச் செயலாளர் டான்யால் சவுத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஆப்கனிஸ்தான் பல பயங்கரவாத குழுக்களுக்கு புகலிடமாக உள்ளது. ஐநா அறிக்கையின்படி, 21 பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த போராளிகள் ஆப்கனிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகின்றனர். இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக, ஆப்கனிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பாவி மக்களைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. பாகிஸ்தான் எப்போதும் அமைதியை விரும்புகிறது. ஆனால், ஆப்கனிஸ்தானின் மண், மறைமுகத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுவதால், நமது நாட்டை பாதுகாப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. தேசிய பாதுகாப்பில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து