எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : பாராளுமன்ற கூட்டம் 26-ம் தேதி நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால் கூட்டத்தை மேலும் 3 நாட்கள் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் முடிந்து நாட்டின் 17-வது பாராளுமன்ற அவை உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்ஜெட்டுக்கான பாராளுமன்ற கூட்டம் கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியது. முதலில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பாராளுமன்ற சபாநாயகர் தேர்தல் நடந்தது. ஓம்பிர்லா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாதம் 2-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூட்டு அவையில் உரை நிகழ்த்தினார். அதன்பிறகு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உறுப்பினர்கள் பேசினார்கள். அதை தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரை தீர்மானத்தின் மீதான விவாதங்கள் தற்போது நடந்து வருகின்றன.
பாராளுமன்ற கூட்டத்தை வருகிற 26-ம் தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மேலும் 3 நாட்கள் கூட்டத்தை நீட்டிக்க இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளுடன் பேசி கூட்டத்தை நீட்டிக்க அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படும். முத்தலாக் மசோதா, புதிய வாகன சட்ட மசோதா போன்ற பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதற்கு வசதியாக கூட்டத்தை மேலும் 3 நாள் நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர்.
வழக்கமான பாராளுமன்ற நிகழ்வுகளை ஒப்பிடும்போது இந்த கூட்டம் அதிக நேரம் நடந்துள்ளது. அதாவது சராசரி அளவை ஒப்பிடும் போது 128 சதவீதம் கூட்டம் நடந்துள்ளது. பல்வேறு விவாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டில் இந்த கூட்டம் தான் அதிக நேரம் நடத்தப்பட்டுள்ளது. 2 முறை அலுவல் பணிகளை நீடிக்க நள்ளிரவு வரையிலும் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


