தடை நீங்கியதால் தென் ஆப்பிரிக்காவில் கொடூரமாக கொல்லப்படும் யானைகள் - விலங்கு ஆர்வலர்கள் துயரம்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2019      உலகம்
elephant 2019 07 21

பிரிட்டோரியா : தென் ஆப்பிரிக்காவில் இறந்த யானையின் புகைப்படம் ஒன்று, உலகில் அனைவரிடத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் ஜெஸ்டின் சுலிவான். இவர் ஒரு ஆவணப்பட இயக்குனர் ஆவார். இவர் சமீபத்தில், போட்ஸ்வானா பகுதியின் வனத்திற்குச் சென்றார். அந்த வனத்தில் உள்ள விலங்குகளின் அரிய புகைப்படங்களை எடுக்க பல்வேறு விதமான நவீன புகைப்பட கருவிகளுடன் சென்றார். அவர் வனத்தில் ஏதேனும் அரிய காட்சிகள் இருக்கிறதா? என்பதை கவனிக்க டிரோனை பறக்க விட்டு இயக்கினார். சிறிது நேரம் பறந்த டிரோன், ஓர் துயர காட்சியை காண்பித்தது. அந்த காட்சியில் யானை ஒன்று, தும்பிக்கை தனியாகவும், உடல்பகுதி தனியாகவும் துண்டிக்கப்பட்டு இறந்துக் கிடந்துள்ளது. இதனை கண்டு ஜெஸ்டின் கடும் அதிர்ச்சிக்குள்ளானர். பின்னர் சரியாக புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம்தான் இப்போது பார்ப்பவர்களின் இதயங்களை கனமாக்கி வருகிறது.

இது குறித்து ஜெஸ்டின் கூறுகையில், இந்த புகைப்படத்திற்கு டிஸ்கனெக்‌ஷன் என பெயரிட்டுள்ளேன். இந்த பெயரை யானை மற்றும் தும்பிக்கைக்கு இடையேயான முறிவை பற்றியது மட்டுமல்ல, விலங்குகள் வேட்டையாடப்படுவதற்கும், அவற்றை கண்டு கொள்ளாத நமக்கும்தான். இந்த புகைப்படத்தின் வலி மேலே இருந்து எடுத்ததால் நன்றாக புரியும் என்று தெரிவித்தார். போட்ஸ்வானாவில் 5 ஆண்டுகளாக யானைகள் வேட்டையாடப்படும் சட்டம் தடையில் இருந்தது. இந்த தடை, கடந்த மாதம்தான் திரும்பப் பெறப்பட்டது. இதனால், இப்போது இது போன்ற துயர சம்பவம் அரங்கேறியுள்ளதாக விலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து