எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
17 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஜூலை மாத காலத்தில் இப்படி ஒரு பெரும் சரிவை பங்குச் சந்தைகள்நேற்று சந்தித்துள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
மத்திய பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட வெளிநாட்டு போர்ட் போலியோ முதலீட்டாளர்கள் மீதான வரி, மந்தமான பொருளாதாரம் மற்றும் வீழ்ச்சியடைந்துள்ள நுகர்வு ஆகியவையும், இப்படி பங்குச் சந்தை வீழ்ச்சியடைய காரணங்களாக சொல்லப்படுகிறது.
தேசிய பங்குச் சந்தையான நிப்டி 11,000 புள்ளிகளை விடக் குறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜூன் 3-ம் தேதி 52 வாரத்தில் முதல் முறையாக 12,103.05 என்ற அளவுக்கு நிப்டி புள்ளிகள் அதிகரித்திருந்தன. அதன்பிறகு இப்படி ஒரு வீழ்ச்சியை நிப்டி சந்தித்தது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 37,000 புள்ளிகளுக்கும் குறைவாக வீழ்ந்தது மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ். இன்று மட்டும் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. அமெரிக்க டாலருக்கு எதிராக 68.79 என்ற அளவில் இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று 69.20 ஆக சரிந்தது. இது மற்றொரு மோசமான பொருளாதார அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
சென்செக்ஸ் பங்குகளில், வேதாந்தா மற்றும் எஸ்.பி.ஐ. கிட்டத்தட்ட 6 சதவீத சரிவை சந்தித்தன. எச்.டி.எப்.சி வங்கி, இன்போசிஸ், டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டாடா ஸ்டீல் மற்றும் எஸ் வங்கி ஆகியவையும் நேற்று அதிகப்படியான சரிவை சந்தித்த நிறுவனங்கள் ஆகும். இருப்பினும் பின்னர் ஓரளவுக்கு பங்கு விலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 37,018.32 புள்ளிகளுடன் இருந்தது. 462.80 புள்ளிகள் சரிவாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


