அரசியலை விட்டு விலகலாமா என யோசித்து வருகிறேன் - கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பேட்டி

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      இந்தியா
kumaraswamy 2019 07 30

பெங்களூரு : அரசியலை விட்டு விலகலாமா என யோசித்து வருகிறேன் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்ததை அடுத்து கர்நாடக முதல்வராக எடியூரப்பா 4-வது முறையாக பதவி ஏற்றார்.  இந்த நிலையில் முன்னாள் முதல்வர் குமாரசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அரசியலை விட்டு விலகலாமா என யோசித்து வருகிறேன். என்னை அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ விடுங்கள். இனியும் அரசியலில் தொடர விரும்பவில்லை. மக்கள் மனதில் ஒரு இடம் கிடைத்தால் போதும். எதிர்பாராத விதமாக அரசியலுக்கு வந்த நான் எதிர்பாராத விதமாக முதல்வரானேன். இரண்டு முறை முதல்வர் ஆவதற்கு கடவுள் எனக்கு வாய்ப்பு வழங்கினார். 14 மாதங்களாக மாநில வளர்ச்சிக்கு நான் கடுமையாக உழைத்துள்ளேன் இதனால் நான் திருப்தி அடைகிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து