திண்டுக்கல் அருகே கோவில் விழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2019      திண்டுக்கல்
4 dglvovil

திண்டுக்கல், -திண்டுக்கல் அருகே நடந்த கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டுக்கல் அருகிலுள்ள கம்பிளியம்பட்டி ஆண்டியபட்டியில் மகாலட்சுமி, ஸ்ரீகருப்பசாமி கோவிலில் ஆடித்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். ஆடிப்பெருக்கை முன்னிட்டு நடைபெறும் இத்திருவிழாவில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் நடந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். சுவாமிக்கு பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்தியும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். விழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி சுவாமிக்கு நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் கோவில் முன்பு வரிசையாக அமர வைக்கப்பட்டனர். அவர்களின் தலையின் மீது கோவில் பூசாரி தனது வாயில் துணியை மூடியவாறு தேங்காயை உடைத்தார். இந்நிகழ்ச்சியைக் காண சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். விழா முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு கிராமமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து