பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 1 ஆம் எண் கூண்டு ஏற்றம்: தனுஸ்கோடி கடல் பகுதியில் சீற்றம்.

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2019      ராமநாதபுரம்
6 boyal koondu-

 ராமேசுவரம்,-   பாம்பன் துறைமுகத்தில் 1 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள்  மீன் பிடிக்க செல்ல தடை விதித்து  கரையோரப்பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டு என ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்தனர்.
     வடமேற்கு வங்க கடலில் மேற்கு வங்கம் டிக்ஹாவிற்கு கடல் பகுதியில் 130 கிலோ மீட்டர் தொலைவிலும் ,ஒடிசா மாநிலம் பாலசூர் கடல் பகுதியில் 160 கிலோ மீட்டர் தொலைவிலும் இடைப்பட்ட கடல் பகுதியில் காற்றலுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இதனால் தமிழக கடலோரப்பகுதியில் பலத்த சூறாவளியுடன் கூடிய காற்று கடந்த நான்கு நாட்களாக வீசி வருகிறது. இதனால்  இந்த பகுதியில் மீன்பிடிக்க  செல்ல மீனவர்களுக்கு தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். அதன் ஒரு பகுதியாக ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்துக்கு மேலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களின் 1500 க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளை கடலில் நங்கூரமிட்டு பாதுகாத்து வருகின்றனர்.இந்த நிலையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.இதனால் தமிழக கடலோரப்பகுதியில் சுழற்ச்சி காற்று தொடங்கி கரையோரங்களில் பலத்த அலையுடன் கூடிய காற்று வீசி வருகிறது.இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானிலை மையம் அறிவிப்பின்படி பாம்பன துறைமுகத்தில் 1ஆம் எண் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றபட்டது.மேலும் கடலில் காற்று வேகமாக வீசக்கூடும் என்றும் கடல் ஆலைகள் வழக்கத்திற்கு மாறாக வரக்கூடும் என்பதால் கரையோரங்களில் வசித்து வரும்  மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்  என  மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

      தனுஸ்கோடி பகுதியில் பலத்த மண் புயல் காற்று:
  ராமேசுவரம் தனுஸ்கோடியில் தென்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்படுகின்றது.மேலும் அரிச்சல்முனை பகுதிகளில் மண் புழுதி புயல் ஏற்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளது.  இதனால் தனுஸ்கோடி பகுதியை காண வரும்  சுற்றுலா பயணிகள் செலல் முடியாமல் திரும்பி வருகின்றனர்.மேலும் அபப்குதிக்கு சென்றாலும் கடலில் இறங்க வேண்டாம் என போலீஸ்சார் எச்சரிக்கை விடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து