முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: நாடு முழுவதும் மசூதிகளில் சிறப்பு தொழுகை

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

ஒவ்வொரு ஆண்டும் துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மசூதிகள் மற்றும் மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சிறப்பு தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

டெல்லி ஜமா மசூதி, போபால் ஈத்கா மசூதி, மும்பை ஹமிதியா மசூதி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல லட்சம் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஜம்முவிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மசூதிகளில் சிறப்புத்தொழுகை நடைபெற்றது

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, டெல்லியின் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள பஞ்ச ஷரீப் தர்காவில், தியாகத் திருநாளையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டார்.  மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள இத்கா மசூதியில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகள் செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.  பக்ரீத் கொண்டாட்ட தினத்தில் புத்தாடைகள் அணிந்து, ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து