Idhayam Matrimony

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டுகிறது

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சேலம் : மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று மாலைக்குள் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது. தற்போது வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் - மேட்டூர் இடையே காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும் கிடு, கிடு என உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.15 லட்சம் கன அடியில் இருந்து 1.65 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர் வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் அணையின் நீர் மட்டம் 67 அடியாக இருந்த நிலையில், ஒரே நாளில் 15 அடி அதிகரித்து அணையின் நீர் மட்டம் 82.62 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 44.61 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீருக்காக வினாடிக்கு 1000 கன அடி திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிரபார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து