எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு சேவாக் தன்னைத்தானே கிண்டல் செய்தது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்த தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடாத சேவாக், 3வது போட்டியில் விளையாட பார்மிங்ஹாம் வந்தார். ஆனால் அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் ‘டக்’ அவுட் ஆனார்.முதல் ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராடும், 2-வது ஆட்டத்தில் ஆண்டர்சனும் சேவாகை ‘டக்’ அவுட் செய்தனர். இந்த டெஸ்ட்டில் இந்திய அணி 224 ரன்களுக்கு முதல் ஆட்டத்தில் மடிந்தது. இங்கிலாந்து அணி, இந்திய அணி வீரர்களை அலைக்கழித்து 710/7 என்ற ஹை ஸ்கோரை எட்டியது. அலிஸ்டர் குக் 294 ரன்கள் விளாசினார். அடுத்த இன்னிங்சில், இந்தியா 244 ரன்களுக்கு சுருண்டது. இதனால் இங்கிலாந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நாளை(ஆகஸ்ட் 12) நினைவுப்படுத்தி பதிவு செய்த சேவாக், ‘இதே நாள்.. 8 ஆண்டுகளுக்கு முன்பாக பார்மிங்ஹாமில் இரு இன்னிங்ஸ்களிலும் நான் பூஜ்ஜியம். இங்கிலாந்துக்கு வர 2 நாட்கள் பயணம் மற்றும் 188 ஓவர்கள் பீல்ட் செய்தோம். இதனால் விருப்பமின்றி ஆர்யபட்டாவுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டியதாயிற்று’ என தன்னைத்தானே கிண்டல் செய்துக் கொண்டுள்ளார். இந்த டுவிட்டிற்கு பலரும் சேவாக்கை பாராட்டி வருகின்றனர்-
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


