எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி, அவரை நினைவுக் கூர்ந்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்திக்கு அவரது பிறந்தநாளான இன்று(நேற்று) என் மரியாதையை செலுத்துகிறேன் என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், நாம் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். தேசப்பற்று மிக்கவரான ராஜீவ் காந்தி தனது தொலைநோக்கு பார்வையாலும், கொள்கைகளாலும் இந்தியாவை கட்டமைக்க உதவினார். எனக்கு எப்போதும் அன்பான தந்தையாக இருந்து, யார் மீதும் வெறுப்புணர்வை காட்டாமல், மன்னிப்பு வழங்கவும், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவும் கற்றுக் கொடுத்தவர் அவர்தான் என பதிவிட்டுள்ளார். முன்னதாக இந்தியாவுக்கான ராஜீவ் காந்தியின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த சாதனை வீடியோ தொகுப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில், இந்தியா முழுவதும் இந்த வாரம் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாள் விழாவினை கொண்டாட உள்ளோம். இந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் ராஜீவ் காந்தியின் துறைச் சார்ந்த சாதனையை எடுத்துரைக்க உள்ளேன். முதலாவதாக தொழில்நுட்பத்தில் அவரது புரட்சி என குறிப்பிட்டிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


