எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதியான ஜாவத் பாஜ்வாவின் பதவிக் காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
வரும் நவம்பர் மாதத்துடன் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவத் பாஜ்வாவின் பதவிக் காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் அவரது பதவிக் காலம் 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாவத் பாஜ்வாவின் பதவி நீட்டிக்கப்பட்டது குறித்து மூத்த பாதுகாப்பு ஆலோசகர் மசூத் கூறும் போது,
ஜாவத், இம்ரான் கானுடன் மட்டும் நல்ல புரிதலில் இருப்பவர் அல்ல. பிராந்தியம் சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் பிரச்சனைகளையும் நன்கு அறிந்தவர். ஆப்கானிஸ்தான் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை என்று அசாதாரண சூழ்நிலையில் இருக்கும் போது இந்த நீட்டிப்பு அவசியம் என்று தெரிவித்தார். இதற்கு முன்னரும் முஷாரப் பாகிஸ்தானின் அதிபராக இருந்த காலத்திலும் அப்போது ராணுவத் தளபதியாக இருந்த கயானியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவும் போது பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் இந்தப் பதவி நீட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


