முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடி - பாலிவுட் நடிகர் அக்சய் குமார் வழங்கினார்

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை, : அசாம் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் அக்சய் குமார் ரூ. 2 கோடி வழங்கியுள்ளார்.

அசாமில் அண்மையில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெருமளவில் பயிர்கள் நாசம் அடைந்தன. சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சேதம் அடைந்தன. இந்நிலையில் அசாம் வெள்ள நிவாரண நிதியாக நடிகர் அக்சய் குமார் ரூ. 2 கோடி வழங்கியுள்ளார். முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. ஒரு கோடியும் காசிரங்கா பூங்கா சீரமைப்பு பணிக்கு ரூ. ஒரு கோடியும் அவர் வழங்கியுள்ளார்.

இது குறித்து நடிகர் அக்சய் குமார் கூறும் போது, நமது நாட்டை அற்புத நாடாக கருதுகிறேன். ஓரிடத்தில் மக்களுக்கு பிரச்சினை என்றால் நீங்கள் ஏதேனும் ஒரு உதவியை தொடங்கி வைத்தால் போதும். நீர்க்குமிழி போல அது பல்கிப் பெருகும். தாராள மனம் கொண்டவர்களின் நாடு இந்தியா. உந்துகோலாக நாம் சற்று தள்ளினால் போதும். உதவிகள் பெருகும். தாய் ஒருவர் தனது குழந்தையை தோளில் சுமந்து கொண்டு வெள்ளத்தை கடந்து வரும் புகைப்படம் ஒன்றை கண்டேன். அவரது முகத்தில் துளியும் வருத்தம் இல்லை. தனது அனைத்து கவலைகளையும் அவர் மறந்து விட்டார். இது போன்ற புகைப்படங்களை பார்க்கும் போது, இத்தகைய சூழ்நிலை நாளை எனது மனைவிக்கோ அல்லது மகளுக்கோ ஏற்படலாம் என கருதினேன். எனவேதான் நிதியுதவி செய்தேன். இதுபோல் வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட காண்டா மிருகம் போன்ற விலங்குகளின் படங்கள் என்னை பாதித்தது. கட வுள் எனக்கு நிறைய பணம் கொடுத்துள்ளார். எனவே ஒரு முறைக்கு மேல் யோசிக்காமல் இத்தொகையை கொடுத்தேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து