Idhayam Matrimony

ஜிம்பாப்வே முன்னாள் அதிபரின் உடல் ஹராரே வீரர்கள் நினைவிடத்தில் அடக்கம்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேயின் உடலை ஹராரேவில் உள்ள வீரர்கள் நினைவிடத்தில் அடக்கம் செய்ய அவருடைய குடும்பத்தினர் சம்மதித்துள்ளனர்.

ஜிம்பாப்வே நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு வரை தொடர்ந்து 37 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் ராபர்ட் முகாபே. கடந்த 2017-ம் ஆண்டில் இவரது அரசு கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து இவரது சகாப்தம் முடிவுக்கு வந்தது. பிரபலமான அரசியல்வாதியான இவர், வயது மூப்பு நோய் காரணமாக கடந்த வாரம் சிங்கப்பூரில் காலமானார்.

இந்நிலையில், அந்நாட்டின் தற்போதைய அதிபர் எமர்சன் நங்கக்வா, முகாபேயின் உடலை ஹராரேயில் உள்ள வீரர்கள் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்படும் என அறிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முகாபேயின் குடும்பத்தினர், அவரது அடக்கம் தனியார் நிகழ்ச்சியாக நடத்தப்படும். அரசு நிகழ்ச்சியாக நடத்த அனுமதிக்க மாட்டோம். முகாபேவின் சொந்த ஊரான குடாமாவில் தான் உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவித்தனர். அரசு நடத்திய சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து முகாபேயின் உடலை வீரர்கள் நினைவிடத்தில் அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர். முகாபேயின் இறுதி சடங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங், கியூபாவின் பிரபல தலைவர் ரால் கேஸ்ட்ரோ மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளின் அதிபர்கள் பங்கேற்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து