முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆசிரியர்கள்- மாணவர்களிடையே கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்காகவே ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் டி.ஜி.பி.யுமான நடராஜ், முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன்  மற்றும் முனைவர்கள், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது,

 8 முதல் பிளஸ் 2 மாணவர்கள் அறிவியல் ரீதியில் முன்னேற்றமடையும் வகையில் இந்த மாத இறுதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் இணையதள வசதிகள் முழுமையாக வழங்கப்படும். மற்ற மாநிலத்தை காட்டிலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமே நினைவாற்றல் திறன் அதிகமாக உள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், இடையே கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்காகவே மத்திய அரசால் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இருந்தே தேர்வு தொடங்கினாலும் மாணவர்களின் திறனை மேம்படுத்த 3 ஆண்டு காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு மட்டுமே தேர்ச்சிக்கான பட்டியல் வெளியிடப்படும். ஆகையால் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும் 3 ஆண்டு தேர்வுக்கான கட்டணம் கட்ட தேவையில்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனச்சுமைகளை அறிந்தே மொழிப் பாடத்திற்கான இரண்டு தாள்கள் ஒரே தாளாக குறைக்கப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சிக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும். இரு மொழிக்கொள்கையே தமிழகத்தில் நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து