முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன ஓபன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் சிந்து

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சாங்சோவ் : சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்.

சீனாவின் சாங்சோவ் நகரில் சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு உலக சாம்பியனும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையுமான பி.வி.சிந்து, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீன வீராங்கனை லி சுவேரியை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 21-18, 21-12 என்ற செட்கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார். 34 நிமிடங்கள் மட்டுமே இப்போட்டி நடந்தது. இந்த வெற்றியின் மூலம் பி.வி.சிந்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை பூசனனிடம் தோல்வியடைந்து வெளியேறினார். இதே போல் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், இந்திய வீரர் சாய் பிரனீத் வெற்றி பெற்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா- சிக்கி ரெட்டி ஜோடி தோல்வியடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து