எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உள்நாட்டு உற்பத்தி நிறுவன வரிவிகிதத்தை குறைப்பதற்கான சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு தொழில் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வரியை 22 சதவீதத்துக்கு குறைக்க பரிந்துரை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி கவுன்சிலின் 37-வது கூட்டம் கோவா மாநிலத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகள், வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்குப் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தொழில் உற்பத்தி துறையில் தொடங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு வரியை 15 சதவீதமாக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்படும் என்றும், 2019-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சர்சார்ஜ், செஸ் உள்ளிட்டவை சேர்த்து புதிய நிறுவனங்கள் மீதான வரி 17.01 சதவீதமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். மேட் வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படும் என்றும், 2023-ம் ஆண்டு வரை இந்த சலுகைகள் நிறுவனங்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது ஆட்டோ மொபைல் துறையில் உற்பத்தி மற்றும் விற்பனையில் வீழ்ச்சி காணப்படுகிறது. தற்போது ஆட்டோ மொபைல் துறைக்கு 28 சதவீதம் வரி விதிப்பு உள்ளது. எனவே ஆட்டோ மொபைல் உற்பத்தியில் தேக்கம் ஏற்படாமல் தடுக்க வரிசலுகையை ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


