முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத் தேர்தல்

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் வட்டியூர்காவு, எர்ணாகுளம்,  கொன்னி, அரூர் மற்றும் மஞ்சீஸ்வரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியி்ட்டது. அக்டோபர் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் 3 எம்.எல்.ஏ.க்களான வட்டியூர்காவு எம்.எல்.ஏ. கே.முரளீதரன், எர்ணாகுளம் எம்.எல்.ஏ. ஹிபி எடன், கொன்னி தொகுதி எம்.எல்.ஏ. அடூர் பிரகாஷ் ஆகியோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகினர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏ.எம்.ஆரிப் எம்.பி.யானார்.மஞ்சீஸ்வரம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த அப்துல் ரசாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டதால் இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இதில் வடகரா எம்.பி.யாக முரளிதரனும், எர்ணாகுளம் எம்.பி.யாக ஈடனும், அட்டிங்கல் எம்.பியாக பிரகாஷும், ஆழப்புழா தொகுதி எம்.பி.யாக ஆரிப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான தொகுதிகளை வென்றதால் மிகுந்த உற்சாகத்துடன் இடைத் தேர்தலை எதிர்கொள்கிறது. அதே சமயம் முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு மக்களவைத் தேர்தல் தோல்வியை மனதில் வைத்து திட்டமிட்டு தேர்தல் பணியாற்ற முடிவு செய்துள்ளது. இரு கட்சிகளும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த 5 தொகுதிகளிலும் பா.ஜ.க.வும் போட்டியிடுகிறது. வேட்பாளர்களை விரைவில் அந்தக் கட்சியும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 5 தொகுதிகளிலும் பிரதானமாக காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிக்குத்தான் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து